8/365 ஸ்ட்ரா

அண்ணா ஒரு ஸ்ட்ரா குடுங்க, அனைத்து குளிர்பான கடைகளிலும் கேட்க கிடைக்கும்... இன்று உலகின் மிக பயங்கரமான வியாதி "பிளாஸ்டிக்", அது கொண்டு தயாரிக்கும் ஸ்ட்ரா குப்பையாய் மாறி, மக்கி போகாமல் நம் சந்ததியினர் பலரை (ஒரு நம்பிக்கைதான்) பார்த்த பின்னும் வாழும். 
அப்படி என்ன ஸ்ட்ரா தேவை என்ற கேள்விக்கு பதில், ஐயோ அந்த கப்புல எத்தனை பேர் வாய் வெச்சு குடிச்சாங்களோ என்ற பெரும்பான்மை பதில் வரும். ஓரளவு லாஜிக் உள்ள பதில் என்றே நாமும் நினைப்பேன்... இன்று இங்கு நண்பர் ஒருவருடன் உரையாடி கொண்டிருந்தேன்.. எதேச்சையாக ஸ்ட்ரா பத்தி பேசிக்கொண்டிருந்தோம்.. அப்பொழுது, பலரும் கூறும் பதிலை நண்பரிடம் சுட்டி காட்டினேன். அவரும் சிறிது நேரம் யோசித்துவிட்டு சொன்னார்... 
நீ சொல்வது சரியென்று தோன்றினாலும் காரணம் அதுவல்ல என்று நினைக்கிறேன் என்றார்.
எப்படி சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன்.
"எனக்கு தோழி ஒருவர் இருக்கிறார். அவர் குளிர்பானங்கள் (குறிப்பாக "சாப்ட் ட்ரிங்க்ஸ்", மற்றும் பழச்சாறு ) அருந்தும் பொழுது ஸ்ட்ரா கேட்டு அருந்துவார், ஆனால் பியர், வயின் மற்றும் விஸ்கி அருந்தும் பொழுது ஸ்ட்ரா கேட்பதில்லை. பியர், வயின் மற்றும் விஸ்கி கோப்பைகளும் மற்றவர்கள் உபயோகித்த கோப்பதானே?.. அதுபோல் காப்பி குவளையும் மற்றவர் உபயோகிப்பது தான் என்றார்.
எனக்கு இவ்வளவு நாளும் இது புலப்படவே இல்லை..

அம்மா எதுக்கு ஸ்ட்ரா ?

Comments

Popular Posts