5/365 வெல்லிங்டன்னில் தமிழ்
எழுத ஆரமித்து இன்றுடன் ஐந்தாவது நாள். ஒரு சிறு பெருமிதம் இருந்தாலும் இதை தினமும் தொடரவேண்டும் என்ற அச்சமும் உண்டு. இந்த ஆண்டின் முதல் பயணமாக வெல்லிங்டன் வந்துள்ளேன். இது நியூ சிலாந்தின் தலைநகர். சிறிய ஆனால் அழகான ஊர். ஊருக்குள் எங்கும் நடந்தே சென்றுவிட முடியும். நேற்று மாலை நானும், தோழி ஒருவரும் மாலையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். தோழி வெல்லிங்டனில் வசிக்கிறார். வழியில் நூலகம் வந்ததும், நூலகம் செல்லலாமா என கேட்டார்... பொதுவாகவே நியூ சிலாந்தில் நூலகங்கள் ஏராளம். அதை அழகாகவும் பராமரிப்பார்கள்.. அதனாலேயே சரி என்றேன்.
உள்ளே சென்றதும் முதல் தளம் சென்றோம், தோழியோ இங்கு தமிழ் புத்தகங்கள் உள்ளது என்று தமிழ் புத்தகங்கள் இருந்த பகுதிக்கு கூட்டிச்சென்றார். அய்யோ, அருமையான புத்தகங்கள். பொன்னியின் செல்வன் புத்தகத்தை வெல்லிங்டன் நூலகத்தில் பார்த்ததும் அவ்வளவு குதூகலம்... இந்த நூலகத்தை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் நியாபகம் வந்தது... நம்மில் எத்தனை பேருக்கு இன்னும் நூலகம் செல்லும் வழக்கம் உள்ளது?
Comments