4/365 தேர்வை ஒத்திவைப்பதில்லை!
"நான் தோற்றுப்போவேன் என்று அஞ்சியே, என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்" என்றொரு பாடல் வரி அந்நியன் திரைபடத்தில் இடம்பெறும். எனக்கும் இந்த வரிக்கும் தொடர்புண்டு. என் வாழ்வின் சில விஷயங்களை தோற்றுப்போவேனோ என அஞ்சியே செய்யாதிருந்ததுண்டு. சில பரீட்சைகளை எழுதாமல் தவிர்த்தது முதல், மிக பிடித்த பெண்ணிடம் அன்பை சொல்லாதிருத்தல் வரை அனைத்தையும் தோல்வியின் பயம் கொண்டே செய்யாதிருந்திருக்கிறேன்.
நான் முதல் முதலில் தோற்றது ஆறாம் வகுப்பில் கணிதத்தில் "இன்டிஜெர்" படத்தில் நடந்த வகுப்பு தேர்வில். 100க்கு 32 மதிப்பெண். வழக்கமாய் கணிதத்தில் 90க்கும் மேல் எடுக்கும் ஒருவன் தோல்வியுற்றதை/ அதன் காரணத்தை என் கணித ஆசிரியை ஆராயவில்லை மாறாய் அன்று அவர் வகுப்பில் இருந்து வெளியே நிறுத்தினார். பெற்றோர்கள் சொல்லவே வேண்டாம்.. வீட்டிலும் அர்ச்சனையே... அது தந்த தாக்கம் இன்னும் மனதில் உண்டு.
இன்னும் பல பொழுதுகளில் தோற்ற போது, ஏற்க மறுத்த காரணங்கள் தோல்வி மீது வெறுப்பையே உருவாக்கியது.. தோல்வி என்பது கற்று தரும் பாடமே வெற்றிக்கு அடிப்படை என்று கூறும் பலரும், தன் பிள்ளைகளோ/உறவினர்களோ தோல்வியுறும் போது கடைபிடிப்பதில்லை...
தோல்வி அல்ல தோல்வி, முயற்சி செய்யாமையே தோல்வி என்பதை உணர வருடங்கள் பல ஆனது, ஆனால் உணர்ந்த பின்னர் எப்பொழுதும் முயற்சி செய்ய தயங்கியதில்லை!.... தேர்வை ஒத்திவைப்பதில்லை!

Comments