மாயை! - ‘சவால் சிறுகதை-2011’
இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே
இன்று : காலை 9.30 மணி
"டேய் கார்த்திக், சீக்கிரமா கிளம்புடா, ஏற்கனவே லேட் ஆயிடுச்சி, இப்போ போய் பென் டிரைவ் தேடிட்டு இருக்கியே"... என்று அலறினாள் வாசலில் நின்ற ப்ரியா. "ஒரு நிமிஷம் டா... கிடைச்சிருச்சி" என்று சொல்லிக்கொண்டே வெளியே
வந்தான் கார்த்திக். இருவரும் காரை நோக்கி விரைந்து வந்தபின்.. "டேய் கார்த்திக், உன் ஞாபக மறதிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு டா, இன்னிக்கு மீடிங்க்கு வரப்போற எல்லாருமே தலை தெறிக்க ஓட போறாங்க பாரேன்" என்று நமட்டு சிரிப்புடன் கூறினாள். ஒன்றும் விளங்காதவனாய் புருவத்தை உயர்த்தி எ
ன்ன என்று அவளை உற்று நோக்கினான்... "இப்போ சொல்ல மாட்டேன், ஆபிஸ் போனதும் சொல்றேன் டா" என்று துள்ளி ஓடி, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வண்டியை துவக்கினாள்.
"எனக்கு மட்டும் தான் ஞாபக மறதியா?... உனக்கும் கூடத்தான், நேற்று நடந்ததை மறந்துட்டியா?"... என்றவனிடம்
"அதேன்னவோடா, உன்னோட பேசிட்டு உன் ரூம்ல இருந்து போறப்ப எதையோ மறந்துட்டு போறா மாதிரி ஒரு உணர்வு".. என்று கூறி அழகாய் புன்னகைத்தாள்...
சிறிது நேரம் மௌனித்து துவங்கிய பயணத்தில் "
என்னமோ தெரியலடி இப்போல்லாம் நீ என்னை ரொம்பவே ரசிக்கிற ப்ரியா... இந்த தருணங்கள் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு" என்று கூறி கொண்டே மௌனத்தை கலைத்து பண்பலை கூவியின் பொத்தானை அழுத்தி
னான்... "கோகுலத்து கண்ணா கண்ணா, சீதை இவள் தானா".. என்ற பாட்டை கேட்டதும்...
"ப்ரியா!... கோகுலம்ன்னு கேட்டதும் ஞாபகம் வருது!, இன்னிக்கு கோகுல் வருவானில்ல?"... என்றவனிடம்...
"உன்னோட ரெண்டு கேள்விக்கும் ஒரே பதில் தான், ஆமா" என்றாள்...
"ரெண்டாவது கேள்வியா?.. நான் ஒன்னு
தானே கேட்டேன்" என்ற கார்த்திக்கின் தலை கோதி கண் சிமிட்டி, "இதுக்குதாண்டா உன்னை ரொம்பவே ரசிக்கிறேன்" என்று புன்னகைத்தாள்.
சிறிது நேரத்தில் "விளையாடு மங்காத்தா... விடமாட்டா எங்காத்தா" என்று அவளது அலைபேசி அடிக்கவே, அதை ஆன் செய்து "சொல்லுங்க விஷ்ணு".. என்றாள். மறுமுனையில் பேசியது என்ன என்று தெரியவில்ல. பதிலுக்கு இவள் ஆமா, படிச்சேன், புரிஞ்சுது...... சார் மேடம் எல்லாம் சரிதான்.....அங்கேதான் போறோம், கார்த்திக் என்னோட தான் வரார் . நான் வண்டி ஓட்டிட்டு இருக்கேன் அப்புறம் கூப்பிடுறேனே" என்றாள்.
"யாரு?" - என்றான்
"விஷ்ணு" என்றவள், "இன்னிக்கு ஏன் மீடிங்க்கு வர்றவங்க ஓடிபோவாங்கன்னு சொன்னேன் தெரியுமா?".
"ஆமா, கேக்க மறந்துட்டேன், ஏன் ஓடி
போவாங்க?" என்றவனிடம்
"கார்த்திக் உன் ஜிப்பை போடு டா"... என்று கூறி உரக்க சிரித்தாள்...
"ஆனாலும் நீ அநியாத்துக்கு தல ரசிகைடி.. இந்த பாட்டை ரிங் டோனா வேற யார் போன்லையும் நான் கேட்டதில்லை" என்று கூறிக்
கொண்டே எதுவுமே நடக்காதது போலவே அவனும் ஜிப்பை சரி செய்து முடிக்கவும் வண்டி அலுவலகத்திற்கு வந்து நின்றது.
இன்று - காலை 10.45 மணி
உள்ளே நுழைந்தவர்கள், நுழைவு வாயிலில் தங்கள் கைரேகைகளை பதித்து முன்னால் நடந்தனர்.
"ராகுல், கோகுல் வந்தாச்சா?"...என்று கேட்டுக்கொண்டே ப்ரியா தனது இருக்கையில் அமர்தாள்.
"என்ன ப்ரியா இது, நீங்க ரெண்டு பெரும் இவ்ளோ லேட்டாவா வர்றது?"..
"கோகுல் இன்னும் வரலை. அவன் எப்போதுமே லேட்டாதான் வர்றான்.. சரி நாம மீட்டிங்க்கு போகலாம்" என்று கூறி பக்கத்துக்கு அறைக்கு சென்றனர்.
அறையில் நுழைந்ததும், இரண்டு அந்நிய நாட்டு நண்பர்கள் அவர்களை புன்னகையுடன் வரவேற்றனர்.
"கார்த்திக், கோகுலுக்கு ஒரு போன் பண்ணி கோட் மெசேஜ் பண்ண சொல்லு" என்று காதில் கிசு கிசுத்தாள் ப்ரியா. கார்த்திக் அதற்கு தலையசைத்து தனது கைபேசியை தட்டி விட்டான். இந்நேரத்தில் ராகுல் அந்நிய நாட்டு நண்பர்களுடன் காதில் ஏதோ செய்தி பரிமாறிக்கொண்டு இருவரையும் நோக்கி விரைந்து வந்தான்.
"கார்த்திக், உனக்கே தெரியும் இது எவ்ளோ முக்கியமான ப்ராஜக்ட்ன்னு, நம்ம கிளைன்ட் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, கோகு
ல் இன்னும் வரலை, கோட் இல்லன்னா நாம இவங்களுக்கு டெமோ காட்ட முடியாது. இந்த ப்ராஜக்ட் போச்சுன்னா உன் வேலை போச்சு".
அமைதியாய், கையிலிருந்த கைபேசி அதிர்வை உணர்து அதில் வந்த குறுஞ்செய்தியை படித்து விட்டு...."கோட் வந்துருச்சு ராகுல்.. கோகுல் மெசேஜ் அனுப்பிட்டான்" என்று சொல்லி தனது மடி கணினியை செயலூட்டினா
ன்.
ராகுல் மனதிற்குள் மகிழ்ச்சியுடன், முகத்தில் பரபரப்பை காட்டினான்... சிறிது நேரத்தில் கணினியில் அந்நிய நாட்டு நபர்களுக்கு கார்த்திக் டெமோ காண்பித்து முடித்தான்... ராகுலுக்கு ஒன்றும் விளங்கவில்லை ஆயினும் வெளிக்காட்டி கொள்ளாமல் கார்த்திக்கை பாராட்டி விட்டு தனது இருக்கைக்கு விரைந்தான்.
இன்று மதியம் 1.30 மணி
கார்த்திக்கின் அறையில் கோகுலும் அமர்ந்
திருந்தான்... "எப்போதும் மெயில் அனுப்புற விஷ்ணு நேற்று சீட்டு வச்சிட்டு போனப்பவே சந்தேகமா இருந்துச்சு கார்த்திக், நீ நேற்று மாலை 7 மணிக்கு போன் பண்ணி சொன்னப்போ நம்பவே முடியலை.. இப்போ புரியுது." என்று கோகுல் கூற...
"சரி அதான் பிளானை காலி பண்ணிட்டோமே அப்புறம் என்ன... வேலையை பார்ப்போம்" என்று கோகுலை கழற்றி விட்டான்.
நேற்று மாலை 3.30 மணி
தனது மேஜையிலுள்ள காகிதங்களை அகற்றயில், ஒரு நீல நிற பையில் கீழே விழுந்தது, அதிலிருந்து இரண்டு துண்டு சீட்டுகள் வெளியில் விழுந்தன. அதனை எடுத்து பிரித்து படிக்கலானான்.. ஒன்றில் எழுதி இருந்தது... "Mr. கோகுல் S W H2 6F - இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு" எனவும் இன்னொன்றில், "Sir, எஸ். பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைதான் கொடுத்திருக்கிறேன் கவலைவேண்டாம். - விஷ்ணு" என்றும் எழுதி இருந்ததன் அர்த்தம் விளங்குவதர்க்குள்.... "விளையாடு மங்காத்தா, விடமாட்ட எங்காத்தா" என்று போன் சில காகிதங்களினடியில் அலறியது. எடுத்த பொழுது "Vishnu Informer calling" என்று தெரிந்தது
Comments
அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html