மழையோசை
ஜில்லென்று வீசுகின்ற காற்றினிலே
மிதந்து வரும் மண்வாசனையில்
கண்கள் மூடி கனவில் சென்றேன்
கணங்களை மூடி கைகளை விரித்து
காற்றின் முன் கரைந்து நின்றேன்
இங்கும் அங்கும் விழுந்துளிகள்
புவியிலுள்ள இசயனைதும்
கலந்தெனது செவியில் சேர்க்க
ஓசையின்றி மெய்சிலிர்த்து
இதயத்துள் விழுங்குகின்றேன்
இம்மழையோசையை
Comments